எதிர்நீச்சல் சீரியல் முடிந்தது, புதிய தொழிலை தொடங்கிய நடிகை ஹரிப்பிரியா... என்ன தொழில் பாருங்க

Yathrika
in தொலைக்காட்சிReport this article
எதிர்நீச்சல் சீரியல்
கடந்த 2022ம் ஆண்டு திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் தொடங்கப்பட்டு சின்னத்திரை டிஆர்பியில் மாஸ் செய்த ஒரு தொடர் எதிர்நீச்சல்.
கனிகா, ப்ரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா என 4 பெண்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த தொடரில் கொடூரமான வில்லனாக மாரிமுத்து நடித்திருந்தார்.
அவர் இறப்பிற்கு பிறகு வேலராம மூர்த்தி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
படு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த இந்த தொடர் திடீரென அவசர அவசரமாக முடிக்கப்பட்டது, இது ரசிகர்களுக்கும் கொஞ்சம் வருத்தமாக இருந்தது.
புதிய தொழில்
எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் பேராதரவை பெற்றவர் தான் நடிகை ஹரிப்பிரியா. பரதநாட்டிய டான்ஸரான நந்தினி, புதிதாக நடனப்பள்ளி ஒன்றை தொடங்கி உள்ளார்.
காளிகல்பா என பெயரிடப்பட்டுள்ள அந்த பள்ளியில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனிலும் நடன வகுப்புகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
இதன்மூலம் தனது நீண்டநாள் ஆசை நிறைவேறியதாக கூறி பதிவு போட பிரபலங்கள் அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.