பாலிவுட்டில் அறிமுகமாகும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஜான்சி ராணி... செம ஜாக்பாட்
எதிர்நீச்சல்
சன் டிவியில் கோலங்கள் தொடருக்கு பிறகு திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் தொடர் எதிர்நீச்சல்.
பெண் அடிமை, ஆணாதிக்கம் போன்ற விஷயங்களை மையப்படுத்தி ஒளிபரப்பாகும் இந்த தொடரில் சைலன்ட் வில்லியாக நடித்து வருபவர் ஜான்சி ராணி என்கிற காயத்ரி.
இத்தனை நாட்கள் வராமல் இருந்தவர் தற்போது மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுத்து வில்லத்தனம் செய்ய தொடங்கிவிட்டார்.
புதிய படம்
சமீபத்தில் நடிகை காயத்ரி ஒரு சூப்பரான தகவல் ஒன்றை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.
கடந்த 3 மாதத்தில் மட்டும் ஃபேமிலி, காதலிக்க நேரம் இல்லை, குடும்பஸ்தன், ஒத்த ஓட்டு முத்தையா, மிஸ்டர் ஹவுஸ் கீப்பர் என அவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியானது.
அயலி படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுக்க எதிர்நீச்சல் சீரியல் அதைவிட பிரபலத்தை கொடுத்தது. அவர் பேட்டியில் பகிர்ந்துள்ள இன்னொரு சந்தோஷ செய்தி என்னவென்றால் அவர் பாலிவுட்டில் ஒரு வெப் தொடரில் நடித்துள்ளாராம், விரைவில் வெளியாக உள்ளதாம்.
நான் லேபிள் என்ற வெப் தொடரில் நடித்துக் கொண்டு இருந்த போது தான், எனக்கு பாலிவுட்டில் இருந்து ஆடிஷனுக்கு அழைப்பு வந்தது. ஒரு ஸ்கிரிப்டை அனுப்பி அதை இந்தி மற்றும் தமிழில் பேசிகாட்ட சொன்னார்கள், நானும் நடித்து காட்டி விட்டு வந்துவிட்டேன்.
திடீரென ஒரு நாள் நீங்கள் தேர்வு ஆகிவிட்டீர்கள், புனே மற்றும் லண்டனில் படப்பிடிப்பு என்றார்கள். Scam 1992 என்ற ஒரு அட்டகாசமான வெப் தொடரை கொடுத்த இயக்குநர் Harshad Mehta இந்த தொடரை இயக்கி இருக்கிறார் என்றார்.

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
