எதிர்நீச்சல் சீரியலில் லட்சணமாக புடவையில் நடித்த கனிகாவா இது?.. நீச்சல் உடையில் அவர் வெளியிட்ட போட்டோ
எதிர்நீச்சல்
சுசி கணேசன் அவர்கள் இயக்கிய 5 ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கனிகா.
இப்படத்திற்கு பிறகு படிப்பை முடிக்க வேண்டும் என்பதற்காக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் போன்ற இயக்குனர்களின் படங்களை மிஸ் செய்தார்.
பின் சின்ன கேப் பிறகு சேரனின் ஆட்டோகிராப், அஜித்தின் வரலாறு படத்தில் நடித்தவர் அதன்பிறகு கேமரா பக்கமே காணவில்லை.
2008ம் ஆண்டு இவருக்கு ஷியாம் என்பவருடன் திருமணம் நடந்தது, இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

கனிகா லேட்டஸ்ட்
படங்களில் நடிக்காமல் இருந்த கனிகா சின்னத்திரையில் திருச்செல்வம் இயக்கிய எதிர்நீச்சல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் ஈஸ்வரி என்ற பெயரில் நடித்து வந்தார்.
அந்த தொடரில் லட்சணமாக புடவையில் நடித்து அசத்தியவர் தற்போது தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட போட்டோ பார்த்து ரசிகர்கள் கனிகாவா இது என ஷாக் ஆகியுள்ளனர்.

அதாவது கனிகா தனது குடும்பத்துடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு கிளாமரான நீச்சல் உடையில் எடுத்த போட்டோவை அவர் வெளியிட லட்சணமாக புடவையில் நாம் பார்த்து வந்த ஈஸ்வரியா இது என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.
 
                               
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    