எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகாவின் மகனை பார்த்துள்ளீர்களா.. அழகிய வீடியோ இதோ
நடிகை கனிகா
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் மிக முக்கியமான ஈஸ்வரி எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை கனிகா.
இவர் வெள்ளித்திரையில் வெளிவந்த வரலாறு, எதிரி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கனிகாவின் மகன்
கடந்த 2008ம் ஆண்டு ஷ்யாம் ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், நடிகை கனிகா தனது மகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும், கனிகாவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..