எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதாவின் தந்தையை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ
எதிர்நீச்சல்
சன் தொலைக்காட்சியில் டாப் சீரியலாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தது எதிர்நீச்சல். இந்த சீரியலில் வில்லனாக நடித்து வந்த மாரிமுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மரணமடைந்தார்.
இவருடைய மரணத்திற்கு பின் எதிர்நீச்சல் சீரியல் TRP-ல் சற்று பின்வாங்கியது. இவர் நடித்து வந்த கதாபாத்திரத்தில் இவருக்கு பதிலாக பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி நடிக்க துவங்கினார். எதிர்நீச்சல் சீரியல் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது.
நடிகை மதுமிதா
இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தவர் நடிகை மதுமிதா. இவர் கன்னடத்தில் தான் முதன் முதலில் சீரியல்களில் நடிக்க துவங்கினார். இதன்பின் தெலுங்கு, தமிழ் என மற்ற மொழிகளில் நடிக்க ஆரம்பித்த மதுமிதாவுக்கு எதிர்நீச்சல் சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை கொடுத்தது.
நேற்று தந்தையர் தினம் என்பதால் பலரும் தங்களுடைய தந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களின் புகைப்படங்களை பதிவு செய்து வந்தனர். அந்த வகையில் நடிகை மதுமிதா தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..

அரபு வர்த்தகர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட 450 ஆண்டுகள் பழமையான மரம்.., 40 பேர் தங்கலாம் News Lankasri
