எனக்கு பயந்து வருது, கண்ணீரோடு எதிர்நீச்சல் சீரியல் நந்தினி வெளியிட்ட வீடியோ- ரசிகர்கள் சோகமான கமெண்ட்
எதிர்நீச்சல்
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் எல்லா சீரியலுமே மக்களின் ஆதரவை பெறுவதில்லை.
ஆனால் ஒரு சில தொடர்கள் முடிவுக்கு வந்தால் மக்களும் சரி, அதில் நடித்த நடிகர்களும் சரி மிகவும் எமோஷ்னல் ஆகிவிடுவார்கள்.
அப்படி சமீபத்தில் ஒரு தொடர் முடிவுக்கு வருகிறது என்ற செய்தி வெளியானதில் இருந்து ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
அதேபோல் அந்த தொடரில் நடித்தவர்களும் சீரியல் முடிவது குறித்து எமோஷ்னலாக பதிவு செய்து வருகிறார்கள்.
சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் தொடர் இந்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது, கிளைமேக்ஸ் எப்படி இருக்கும் என்பதை காண மக்களும் ஆவலாக உள்ளனர்.
நீதிபதியிடம் குணசேகரன் கொடுமைகளை புட்டுபுட்டு வைக்கும் பெண்கள், கடைசியில் பேரதிர்ச்சி... எதிர்நீச்சல் சீரியல் பரபரப்பு புரொமோ
ஹரிப்பிரியா பதிவு
எதிர்நீச்சல் தொடரில் நடித்த மதுமிதா மற்றும் சிலர் எமோஷ்னல் பதிவு செய்துவரும் நிலையில் நந்தினி கதாபாத்திரத்தின் மூலம் மக்களின் மனதை கவர்ந்த ஹரிப்பிரியா கடைசிநாள் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்கள், கடைசி டப்பிங் பேசிய போது எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
டப்பிங் பேசும்போது எடுத்த வீடியோவில் ஹரிப்பிரியா எமோஷ்னல் ஆகியிருப்பது நன்றாகவே தெரிகிறது.
வீடியோவை பார்த்த ரசிகர்கள் நந்தினி கதாபாத்திரத்தை எப்போதும் மறக்க மாட்டோம், எதிர்காலம் நன்றாக அமையும் என நிறைய கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.
அதோடு தொடரில் பணியாற்றிய அனைவரையும் குறிப்பிட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார் ஹரிப்பிரியா.