வீட்டிற்கு வந்த குணசேகரன், ஜனனி-சக்திக்கு வந்த ஷாக்கிங் நியுஸ்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது, ஆணாதிக்கம் கொண்ட குணசேகரன் என்பவரை சுற்றிய கதையாக இந்த தொடர் உள்ளது.
எப்படியோ பல போராட்டங்களுக்கு பிறகு தர்ஷன் திருமணம் முடிய இப்போது அன்புக்கரசி வீட்டிற்குள் வந்து உட்கார்ந்து பிரச்சனை செய்ய துவங்கிவிட்டார்.
ஜனனி கையில் இன்னும் ஈஸ்வரி தாக்கப்பட்ட வீடியோ கிடைக்கவில்லை, கெவின் நண்பரை தொடர்பு கொண்டால் அவரும் சரியான பதில் இல்லை.

இன்னொரு பக்கம் குணசேகரன் இத்தனை நாள் பொத்தி பொத்தி வைத்த கடிதம் சக்தியிடம் சிக்கியுள்ளது. இராமேஸ்வரத்தில் நடந்தது குறித்து சக்திக்கு எதுவும் தெரிய கூடாது என குணசேகரன் முன்கூட்டியே ஏதோ பிளான் செய்து வைத்துள்ளார்.

இன்றைய எபிசோட்
சில நாட்களாக எங்கேயோ சென்ற குணசேகரன் மீண்டும் வீட்டிற்கு வருகிறார். வீட்டிற்கு வந்தவர், இனி இந்த வீட்டிற்கும் குடும்பத்திற்கும் எதிராக நடந்தால் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை எல்லோருக்கும் புரிய வைக்க வேண்டும் என்கிறார்.

அவர் பேசுவதை பார்க்கும் போது பயங்கரமாக ஏதோ பிளான் செய்துள்ளார் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது. இதற்கு இடையில் சக்தி-ஜனனி தேடிய கெவின் நண்பன் சுட்டுக் கொள்ளப்படுகிறார்.