சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ
எதிர்நீச்சல்
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல் 2. இந்த சீரியலில் ஆதி குணசேகரன் மீண்டும் அனைவரையும் அடக்கி ஆள ஆரம்பித்துவிட்டார்.

பார்கவி
குறிப்பாக வீட்டில் உள்ள பெண்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டார். மேலும், தர்ஷனுக்கும் அன்புக்கரசிக்கும் திருமணம் ஆகிவிட்டது பதிவு செய்து அவர்களை சட்டப்படி தம்பதி ஆக்கி இருக்கிறார் குணசேகரன். இதை வைத்து பார்கவியை வீட்டை விட்டு வெளியேற்ற திட்டமிட்டுள்ளார். இவ்வளவு கலவரம் வீட்டில் நடந்தும், வாயை திறக்காமல் அப்படியே பிடித்துவைத்த பிள்ளையார் சிலைபோல் ஓரமாக அமர்ந்திருக்கிறார் தர்ஷன்.

ஜனனி - சக்தி
இது ஒரு புறம் நடக்க, தனது கணவர் சக்தியை தேடி குற்றாலம் சென்றுள்ளார் ஜனனி. அங்கு சக்தியை பிடித்து வைத்துள்ளவர்கள் குறித்து துப்பு கிடைக்க, அதை தொடர்ந்து செல்கிறார். சக்தியை அடித்து சிறைபிடித்து வைத்திருக்கும் ராமசாமி அய்யப்பன், தற்போது அவரின் கை கட்டுகளை அவிழ்த்துவிட்டு, என்னை உன்னால் என்ன செய்யமுடியும் என்பது போல் சவால் விடுகிறார்.

சக்தியின் கைகாட்டுகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ள நிலையில், அருகில் இருந்த செல்போனை எடுத்து கால் செய்கிறார். இதன்பின் என்ன நடக்கப்போகிறது? சக்தியை ஜனனி காப்பாற்றுவாளா? பார்கவி வீட்டை விட்டு வெளியேற போகிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri