விரைவில் தொடங்கப்போகும் எதிர்நீச்சல் சீரியல் 2, ஆனால்?- பிரபலத்தின் பதிவு, ரசிகர்கள் சோகம்
எதிர்நீச்சல்
சன் டிவியில் திருச்செல்வம் இயக்கத்தில் கோலங்கள் தொடருக்கு பிறகு ஒளிபரப்பாகி வந்த தொடர் எதிர்நீச்சல்.
கடந்த 2022ம் ஆண்டு ஜனனி, ஈஸ்வரி, நந்தினி, ரேணுகா என்ற 4 பெண்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிபரப்பான இந்த தொடர் ரசிகர்களின் பேராதரவை பெற்றது.
டிஆர்பியில் டாப்பில் எல்லாம் வந்தது, ஆனால் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்துவந்த மாரிமுத்து அவர்களின் இறப்பிற்கு பிறகு கதையில் கொஞ்சம் டல் அடித்தது என்றே கூறலாம்.
இதனால் திடீரென 2024 கடந்த ஜுன் மாதம் தொடரை முடித்தார்கள்.
எதிர்நீச்சல் 2
தொடர் முடிந்த பிறகு அடுத்த சீசன் எப்போது என ரசிகர்கள் நிறைய கேள்வி எழுப்பி வர இப்போது அதற்கான பதில் வந்துள்ளது. அதாவது விரைவில் எதிர்நீச்சல் சீரியல் 2வது சீசன் வரப்போகிறதாம், ஆனால் இதில் என்னால் நடிக்க முடியாது.
வேறொரு விஷயத்தை தொடங்கியிருக்கிறேன் என பதிவு போட்டுள்ளார் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்த மதுமிதா. அவர் எதிர்நீச்சல் 2 வருவது சந்தோஷம் என்றாலும் நீங்கள் இல்லையா எனவும் ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.

ஒரு காலத்தில் ரூ 2க்கு பேனா விற்றவர்.,இன்று மாதம் 24 லட்சம் ஊதியம்: மும்பையில் 4 அடுக்குமாடி குடியிருப்புகள் News Lankasri

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri
