எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புகழ் ஷெரின் தாராவுக்கு ஸ்பெஷல் டே... கொண்டாட்ட போட்டோஸ் இதோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது, சன் டிவியில் டிஆர்பியில் டாப்பில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்.
இதுநாள் வரை தர்ஷன் திருமணம் எப்படி நடக்கும், யாருடன் நடக்கும், குறித்த நாளில், நேரத்தில் நடக்குமா, உயிரிழப்பு இருக்குமா என பல கேள்விகள் இருந்தது. ரசிகர்களின் அத்தனை கேள்விக்கும் கடந்த வாரத்தில் பதில் கிடைத்துவிட்டது.
இப்போது கதையில் ஜனனி தன்னிடம் உள்ள ஆதாரங்களை குணசேகரனிடம் கொடுப்பாரா, முதலில் அவரிடம் வீடியோ கிடைக்குமா என்ற கேள்வி உள்ளது.
கொண்டாட்டம்
இந்த தொடரில் அன்புக்கரசி கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றவர் ஷெரின் தாரா.
என்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டாய், உன்னை வாழ விட மாட்டேன் என கோபமாக பேசிவிட்டு சென்றுவிட்டார். அடுத்து தொடரில் இவரது காட்சிகள் எப்போது வரும் என தெரியவில்லை.
தற்போது இவர் தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,