கொண்டாட்டத்தில் இறங்கிய எதிர்நீச்சல் சீரியல் குழுவினர்- விஷயமே இதுதானா?
எதிர்நீச்சல்
சன் தொலைக்காட்சியின் டாப் TRP லிஸ்டில் இருக்கும் தொடர்களில் ஒன்று எதிர்நீச்சல்.
கோலங்கள் சீரியல் புகழ் திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் ஆணாதிக்கம், பெண் அடிமையை மையமாக கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் தொடராக அமைந்துள்ளது.
இப்போது கதையில் கதிரை யாரோ அடித்துவிட குணசேகரன் எஸ்கே அல்லது ஜீவானந்தம் தான் இப்படியொரு வேலை செய்திருப்பார்கள் என கோபத்தில் உள்ளார். இன்னொரு பக்கம் ஆதிரை தனது முன்னாள் காதலன் வீட்டிற்கு வந்து தஞ்சம் அடைகிறார்.
இனி கதையில் அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை.
கொண்டாட்டம்
வெற்றிகரமாக அடுத்தடுத்து விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர் குழுவினர் இப்போது கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். அதாவது தொடர் தொடங்கப்பட்டு 600 எபிசோடுகளை எட்டிவிட்டதாம்.
மாரிமுத்து இறப்பிற்கு பிறகு தொடர் TRP கொஞ்சம் குறைந்தாலும் இப்போது கதையை வைத்து சூடு பிடிக்க சீரியல் ஒளிபரப்பாகிறது.