எதிர்நீச்சல் சீரியல் முடியும் மாதத்தில் இயக்குனர் திருச்செல்வம் வீட்டில் விசேஷம்.... கொண்டாட்டத்தில் குடும்பம்
எதிர்நீச்சல்
கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் ஒரு தொடர் குறித்த தகவல் அதிகம் வலம் வருகிறது.
அது என்ன தொடர் என்றால் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் தொடர் விரைவில் முடிவுக்கு வருகிறதாம்.
அதிகாரப்பூர்வமாக தகவல் வரவில்லை என்றாலும் அதில் நடித்தவர்கள் சில பதிவுகள் மூலம் தொடர் முடிவதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆனால் கிளைமேக்ஸ் எப்படி இருக்கும் என்பதை மட்டும் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்க்கிறார்கள்.
குட் நியூஸ்
எதிர்நீச்சல் தொடர் ஜுன் மாதம் முடிவடைவதாக கூறப்படும் நிலையில் இந்த தொடர் இயக்குனர் திருச்செல்வம் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.
அதாவது வரும் ஜுன் 10ம் தேதி திருச்செல்வம் வீட்டில் விசேஷம் என்கின்றனர்.
திருச்செல்வம் அவர்களின் மகள் பிரியதர்ஷினிக்கு ஜுன் 10ம் தேதி திருமணம் என்றும் இதற்கான அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் தற்போது அவர் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் திருச்செல்வம் மகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.