எதிர்நீச்சல் தொடர்கிறது: பிரியாணியில் கரப்பான் பூச்சியை போட்ட அறிவுக்கரசி! ஃபுட் டிரக்-க்கு சீல் வைக்கப்படுமா..
எதிர்நீச்சல் சீரியல்
சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் தற்போது, ஆதி குணசேகரன் கைதாகிவிடுவோம் என்று பயந்து ஓடி ஒளிந்திருக்கிறார்.

இந்த நேரத்தில் பெண்கள் அனைவரும் சேர்ந்து ஃபுட் டிரக் பிசினஸ் தொடங்கி, அதை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். நாளுக்கு நாள் இதற்கு வரவேற்பு அதிகரித்து வருவதை அறிந்த ஆதி குணசேகரன், முதலில் கவுன்சிலரை வைத்து மிரட்டி பார்த்தார். ஆனால், அதற்கெல்லாம் ஜனனி பயப்படவில்லை, எதிர்த்து நின்று போராடினார்.
சீல் வைக்கப்படுமா
இந்த நிலையில், தற்போது ஃபுட் டிரக் பிசினஸுக்காக வீட்டில் சமைத்து வைக்கப்பட்டிருந்த பிரியாணியில் அறிவுக்கரசி கரப்பான் பூச்சியை போட்டுவிட்டார். இது தெரியாமல், ஜனனி அந்த பிரியாணி அண்டாவை ஃபுட் டிரக்க்கு எடுத்து சென்றுவிட்டார்.

இந்த சமயத்தில், அங்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு சோதனை செய்ய வருகிறார்கள். அனைத்தையும் அவர்கள் சோதனை செய்ய, கரப்பான் பூச்சி போடப்பட்டுள்ள பிரியாணி அண்டாவை பார்ப்பார்களா, அப்படி நடந்தால் தமிழ் ஃபுட் டிரக்-க்கு சீல் வைக்கப்படுமா? அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.