மீண்டும் வந்த கதிர், ஞானம்.. அதிர்ச்சியில் ஜனனி மற்றும் பெண்கள்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்..
எதிர்நீச்சல்
ஆதி குணசேகரனால் தங்களுக்கு ஏற்பட்ட அனைத்து தடைகளையும் மீறி, சக்தியை காப்பாற்றி தடைகளை உடைத்தெறிந்தார் ஜனனி. இதன்பின், சட்டப்படி ஆதி குணசேகரன் மீது புகார் அளித்தனர். போலீஸ் கைது செய்ய வரும் நேரத்தில், தனது தம்பிகளுடன் புறப்பட்டு தலைமறைவாகிவிட்டார் குணசேகரன்.

பல போராட்டங்களை கடந்து ஜனனி மற்றும் பெண்கள் இணைந்து ஃபுட் டிரக் பிசினஸ் தொடங்கினார்கள். இந்த ஃபுட் டிரக் பிசினஸையும் கெடுப்பதற்காக பல திட்டங்களை ஆதி குணசேகரன், அறிவுக்கரசி மூலம் செய்தார். ஆனால், எதுவும் எடுபடவில்லை.
மீண்டும் வந்த கதிர், ஞானம்
இந்த நிலையில், தனது அண்ணனுக்கு துணையாக தலைமறைவாக இருந்த கதிர் மற்றும் ஞானம் இருவரும் தற்போது மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளனர். அதுவும் ஆதி குணசேகரனை மீண்டும் அந்த வீட்டில் ராஜாவாக அமரவைப்போம் என சபதம் எடுக்கிறார்கள்.

வந்தவுடன், ஜனனி மற்றும் பெண்கள் அனைவரையும் மிரட்டி, இந்த ஃபுட் டிரக் பிசினஸை உடனடியாக நிறுத்த வேண்டும் என மிரட்டுகின்றனர். மேலும், இனி அந்த வீட்டில் எங்களுடைய ராஜ்ஜியம்தான் என்றும் கதிர் கூறுகிறார். இனி ஜனனியின் அடுத்த நகர்வு எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.