இதுக்கு பேரு குடும்பமா.. பெரிய இடி வரப்போகுது! - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இன்று
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இன்று என்ன நடந்தது என விரிவாக பார்க்கலாம். சக்தி மற்றும் ஜனனி இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, ஜனனி தன்னால் உங்களுக்கு நிம்மதியான வாழ்க்கை இல்லாமல் போய்விட்டது, நான் சரியான பார்ட்னர் இல்லை என சொல்கிறார். ஆனால் சக்தி அதை கண்டுகொள்ளாமல் ஜனனி காயத்துக்கு கட்டுப்போட்டுகொண்டிருக்கிறார்.
அதன் பின் சக்தி தனக்கு ஒரு பெரிய சீக்ரெட் தெரியவந்திருப்பதாக கூறுகிறார். 30 வருடங்களுக்கு முன் ராமேஸ்வரத்தில் இருந்து எழுதப்பட்ட லெட்ட்டர் அது, அதை தான் படித்துவிட்டதை அறிந்தும் குணசேகரன் அது பற்றி கேட்காமல் இருக்கிறார். அது பற்றி முழுமையாக தெரிந்துகொண்டு வந்து சொல்கிறேன். அதற்காக ராமேஸ்வரம் செல்கிறேன் என கூறுகிறார் சக்தி.
கதவை உடைக்க போகும் கதிர்
தர்ஷன் மற்றும் பார்கவி ஆகியோர் அறையை எடுத்துக்கொண்டதால் குணசேகரனின் தம்பிகள் கதிர், ஞானம் ஆகியோர் வெளியில் தூங்கியதால் கடுப்பில் இருக்கின்றனர்.
காலையில் விடிந்தபிறகும் அவர்கள் வெளியில் வரமால் இருந்ததால் கதிர் கதவை தட்டி அவர்களை கோபமாக திட்டுகிறார். அப்போது பெண்கள் வந்து அவர்களை தடுத்து நிறுத்துகின்றனர்.
அவர்கள் வெளியில் வந்த பிறகு குணசேகரனின் அம்மா அவர் பாணியில் திட்ட பெண்களை அவரை கடுமையாய்க் எச்சரிக்கின்றனர். இது குடும்பமா என கேட்டு அவரை திட்டுகின்றனர்.
ஒரு வாரம் இருங்க
இன்னும் ஒரு வாரம் இருங்க, உங்களை பற்றிய உண்மை பெரிய இடியாக வர இருக்கிறது என ஜனனி எச்சரிக்கிறார்.
அதற்கு முன் கொலைசெய்யப்பட்ட கெவின் நண்பன் அஸ்வினிடம் சக்தி போனில் பேசுகிறார். குணசேகரன் வீடியோ உன்னிடம் இருப்பது தெரியும், நேரில் வா பேசலாம் என அழைக்கிறார். ஆனால் அவன் மறுக்க உடனே தான் உன் வீட்டுக்கே வருவேன் என சக்தி கூறுகிறார். அதனால் அவனை வர ஒப்புக்கொள்கிறான்.
அவனை பார்த்து வீடியோ வாங்க சக்தி மற்றும் ஜனனி இருவரும் கிளம்பி செல்கின்றனர். அதை எல்லாம் அறையில் இருந்து அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கிறார் குணசேகரன். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.