ஒன்றாக பிரபலத்தின் திருமண விழாவில் கலந்துகொண்ட எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகைகள்... புகைப்படங்கள் இதோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சீரியல்களுக்கு பெயர் போன சன் தொலைக்காட்சியில் அடுத்து என்ன அடுத்து என்ன என்று பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது.
தன் மீது குண்டாஸ் வழக்கு போடப்பட்டும் போலீஸில் சிக்காமல் மறைந்து மறைந்து வாழ்க்கிறார் குணசேகரன். தான் சமாளிக்க வேண்டிய பெரிய பிரச்சனை இருந்தாலும் தனது வீட்டுப் பெண்கள் சாதிக்க கூடாது என அதிலே மிகவும் கவனம் செலுத்துகிறார்.

இப்போது அறிவுக்கரசியை வைத்து ஒரு பிரச்சனையை துவங்கியுள்ளார் அது என்ன ஆகும் என்பது இன்றைய எபிசோடில் தெரியும்.
கொண்டாட்டம்
பரபரப்பான சீரியல் கதைக்களம் ஒளிபரப்பாக இப்போது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகைகள் ஒன்றாக ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.
சீரியலில் ரேணுகா கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரியதர்ஷினியின் சகோதரருக்கு அண்மையில் திருமணம் நடந்தது, அந்த நிகழ்ச்சியில் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகைகள் அனைவரும் கலந்துகொண்டனர்.
இதோ போட்டோஸ்,



