சக்தி படித்த குணசேகரன் மறைத்து வைத்த கடிதம், யார் எழுதியது தெரியுமா, என்ன இருந்தது?.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்
எதிர்நீச்சல் தொடர்கிறது
தர்ஷன் திருமணத்தை தான் நினைத்தபடியே அன்புக்கரசியுடன் நடத்தி முடிப்பேன் என்ற திமிரில் இருந்தார் குணசேகரன்.
ஆனால் கடைசி நேரத்தில் முதலில் ஜனனி மண்டபத்திற்கு வந்து அவருக்கு ஷாக் கொடுத்தார், பின் பார்கவி-ஜீவானந்தம் மண்டபத்திற்கு வர அனைவரும் சண்டை போட்டார்கள்.
கடைசியில் யாரும் எதிர்ப்பார்க்காத திருப்பமாக அறிவுக்கரசி செய்த கொலையால் ஜனனி நினைத்தபடி தர்ஷன்-பார்கவி திருமணம் நடந்து முடிந்தது.
இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது, குணசேகரன் என்ன செய்யப்போகிறார், அதை ஜனனி எப்படி எதிர்க்கொள்ள போகிறார் என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.
கடிதம்
திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்த குணசேகரன் தனது பீரோவில் எதையோ தேடுகிறார், அது சக்தி எடுத்த கடிதமாக தான் இருக்கும் என தெரிகிறது.
கடந்த அக்டோபர் 18, 1990ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் ஒரு பெண் இந்த கடிதத்தை எழுதியிருக்கிறார். இது வெறும் லெட்டர் இல்லை, இது ஒரு விதை. இந்த விதை உன்னோட வம்சத்தையே அழிச்சிடும் குணசேகர் என எழுதியுள்ளது.

திருமணத்தை முடித்த ஜனனிக்கு அடுத்து வந்த ஷாக்கிங் தகவல், என்ன நடக்கும்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
அந்த பெண் யாரா இருக்கும் என்பது இனி கதையாக செல்லும் என்று தெரிகிறது.