எதிர்நீச்சல் 2 சீரியலில் என்ட்ரி ஆகும் பிரபல நடிகர்? எதிர்பார்க்காத ஒருவர்
சன் டிவியில் முன்னணி சீரியலாக தற்போது இருந்து வருகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடி வரும் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து டாப் 5ல் இடம் பிடித்து வருகிறது.
இந்த சீரியலில் தர்ஷன் திருமணம் யாருடன் நடக்கும் என்பது தான் கடந்த சில வாரங்களாகவே பெரிய கேள்வியாக இருந்து வருகிறது. இந்த தருணத்தில் பல்வேறு ட்விஸ்டுகள் கதையில் தினம் தோறும் வந்து கொண்டிருக்கிறது.
புது எண்ட்ரி?
இந்நிலையில் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் புது கதாபாத்திரம் ஒன்று என்ட்ரியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மிக முக்கியமான ரோல் அது என்றும் அதில் கோலங்கள் ஆதி நடிக்க இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. இருப்பினும் சேனல் தரப்பில் எந்த அறிவிப்பும் இன்னும் வரவில்லை.
ஆதி எதிர்நீச்சலுக்கு வருகிறாரா, அது வில்லன் கதாபாத்திரமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.