மகனையே கொடூரமாக மிரட்டும் ஆதி குணசேகரன், பெண்கள் திட்டம் நடக்குமா! எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ
சன் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக தற்போது இருந்து வருகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது. ஆதி குணசேகரன் vs பெண்கள் என கதை பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.
பார்கவி தான் தர்ஷனுக்கு சரியாக பெண்ணாக இருப்பார் என சொல்லி அவர்கள் திருமணத்தை நடத்த பெண்கள் முடிவெடுக்கின்றனர். ஆனால் பார்கவி தனக்கு திருமணமே வேண்டாம் என சொல்லி எமோஷ்னலாக பேசுகிறார்.
அடுத்த வார ப்ரோமோ
தற்போது வெளியாகி இருக்கும் அடுத்த வார ப்ரோமோவில் பெண்கள் திட்டம் ஒருபக்கம் இருக்க, ஆதி குணசேகரன் தனது மகன் தர்ஷனை மிரட்டுவது காட்டப்பட்டு இருக்கிறது.
"நேராக மண்டபத்திற்கு போறோம், நீ தாலியை கட்டுற. அப்படி இப்படி அசைந்தால் மகன் என கொஞ்ச நெஞ்சம் ஒட்டிக்கிட்டு இருக்குற பாசமும் வெட்டிக்கிட்டு போய்விடும்" என நேரடியாகவே எச்சரிக்கிறார்.
ப்ரோமோவை இதோ பாருங்க.