குணசேகரன் செய்த விஷயத்தால் பெண்கள் உச்சக்கட்ட அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் பெண்கள் எல்லோரும் சேர்ந்து தொடங்கி இருக்கும் ஹோட்டல் தொழிலை எப்படியாவது காலி செய்ய வேண்டும் என ஆதி குணசேகரன் பல மோசமான செயல்களை செய்து வருகிறார்.
குணசேகரன் தம்பி கதிர் தற்போது வீட்டுக்கு திரும்பி தன் வில்லத்தனத்தை மீண்டும் தொடங்கி எல்லோருக்கும் சிக்கலை கொடுக்க தொடங்கிவிட்டார்.
குணசேகரனுக்கு எஸ்பி லெவலில் ஆதரவு இருந்ததால் தான் குண்டர் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக கொற்றவை போன் செய்து ஜனனிக்கு கூறுகிறார்.

அடுத்த வார ப்ரோமோ
இந்நிலையில் அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஜனனி ஹோட்டல் தொடங்கி இருக்கும் பில்டிங்கிற்கு போலீசார் வந்து அமுதா என்ற பெண்ணை காணவில்லை என தேடுகின்றனர்.
அந்த பெண் அங்கே மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை பார்த்து ஜனனி உள்ளிட்ட பெண்கள் கடும் அதிர்ச்சி ஆகின்றனர்.
குணசேகரன் செய்த வேலையால் தற்போது ஜனனி மற்றும் பெண்களுக்கு பெரிய சிக்கல் வந்திருக்கிறது.