அழகாக தோன்ற எதிர்நீச்சல் சீரியல் நடிகை பார்வதி பயன்படுத்தும் மேக்கப் Item என்ன தெரியுமா?
எதிர்நீச்சல்
சன் தொலைக்காட்சிக்கு டிஆர்பி கொடுக்கும் தொடர்களில் ஒன்றாக உள்ளது திருச்செல்வம் அவர்கள் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல்.
முதல் சீசன் முடிவடைந்து 2வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த புதிய சீசனிலாவது பெண்கள் அடுத்தடுத்து ஜெயிக்கும் வகையில் கதை அமையும் என்று பார்த்தால் இப்போதும் ஆண்களுக்கு சாதகமாகவே கதை உள்ளது.

பெண்கள் வாழ்க்கையில் சாதிக்க ஒரு அடி எடுத்து வைத்தால் அடுத்த நொடியே 10 அடி வாங்கி கீழே சென்றுவிடுகிறார்கள். அப்படி தான் ஒரு சமையல் தொழில் ஆரம்பித்தார்கள், ஆனால் இப்போது அதுவும் போய் மீண்டும் வீட்டுப் பிரச்சனைகளால் வீட்டிலேயே முடங்கிவிட்டனர்.
பியூட்டி டிப்ஸ்
இந்த எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் மூலம் மக்களால் கொண்டாடப்படும் நாயகியாக மாறிவிட்டார் பார்வதி. சீரியல் நடிப்பது, வெப் தொடர் நடிப்பது, போட்டோ ஷுட்கள் என பிஸியாக இருக்கும் பார்வதியின் பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.

அதில் அவரிடம் முடியின் அடர்த்திக்கான காரணம், பிடித்த மேக்கப் ஐடம் பற்றி கேட்டுள்ளனர். அதற்கு அவர், வாரத்தில் 2 முறை தலைக்கு குளிப்பேன், கரிசலாங்கண்ணியை எண்ணெயில் அம்மா நன்றாக காய்ச்சி தருவார்கள், அதை பயன்படுத்துவேன்.
பேவரெட் மேக்கப் பொருள் என்றால் எனக்கு Highlighter மிகவும் பிடிக்கும். முகம் டல்லாக இருந்தால் அதை பயன்படுத்தும்போது அப்படியே முகம் பளபளப்பாக காட்டும் என கூறியுள்ளார். இதுதான் எனது பேவரெட் மேக்கப் பொருள் என கூறியுள்ளார்.

ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri