குணசேகரன் நெற்றியில் அதிரடியாக துப்பாக்கி வைத்த போலீஸ்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் அந்த காட்சி வரப்போவதாக தெரிகிறது, ஆனால் இயக்குனர் என்ன டுவிஸ்ட் வைப்பார் என தெரியவில்லை.
குண்டாஸ் பாய்ந்ததும் வீட்டைவிட்டு ஓடிவிட்டார் குணசேகரன், அவர் போலீஸிற்கு சவால்விடும் வகையில் பாண்டிச்சேரி, சென்னை என மாறி மாறி சென்றுகொண்டிருக்கிறார்.

போலீஸ் வலைவீசி தேடிக்கொண்டிருந்தாலும் வீட்டுப் பெண்களை சோதிப்பதை மட்டும் அவர் நிறுத்தவில்லை.
புரொமோ
இதில் இப்போது நந்தினியின் மகள் தாராவை பயன்படுத்தியுள்ளார் குணசேகரன். கதிர் மீது வழக்கு போடப்பட்டதை நீக்குமாறு தனது பாட்டியிடம் கெஞ்சுகிறார் தாரா.
அவரோ உன் அப்பா செய்த தவறு அப்படி, தண்டனை கிடைக்க வேண்டும் என்கிறார். இன்றைய எபிசோடின் Previewவில், குணசேகரன் காரில் வந்துகொண்டிருக்கும் போது போலீசிடம் சிக்கிவிடுகிறார்.

நமது டிப்பார்ட்மென்ட் தேடும் நபர் இவர்தான் என குணசேகரன் நெற்றியில் துப்பாக்கி வைக்கிறார், இதோ அந்த அதிரடி காட்சியின் வீடியோ,