ஓடி ஒளிந்த குணசேகரன், மாஸாக நுழைந்த ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் குணசேகரன் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஜனனி சில விஷயங்களை தற்போது செய்து இருக்கிறார்.
சக்தியை கடத்தி படாத பாடு படுத்தி உயிருக்கே போராடும் அளவுக்கு செய்த அவரை எதாவது செய்ய வேண்டும் என ஜனனி நேராக நீதிபதியிடமும், போலீஸ் உயரதிகாரிகளிடம் பேசி புகார் கொடுக்கிறார்.
அதனால் குணசேகரன் கைது செய்ய போவதாக அவர்கள் சொல்கின்றனர். இந்த முறை குணசேகரன் ஒரு வருஷத்துக்கு வெளியில் வர முடியாது எனவும் கூறுகின்றனர்.

இன்றைய ப்ரோமோ
தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கைதுக்கு பயந்து குணசேகரன் மற்றும் தம்பிகள் வீட்டை விட்டு வெளியேறி எங்கோ ஓடுகின்றனர்.
மறுபுறம் வீட்டில் அறிவுக்கரசி கையில் கத்தி உடன் ரகளை செய்து கொண்டிருக்கிறார். அப்போது ஜனனி மாஸ் ஆக வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கிறார்.
ப்ரோமோவை பாருங்க