தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை கடத்தி சித்ரவதை செய்து, ஜனனியை அலையவிட்ட ஆதி குணசேகரன் தற்போது வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாக சுற்றி வருகிறார்.
ஜனனி போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் நீதிபதி போன்றவர்களிடம் புகார் அளித்த நிலையில் குணசேகரனை கைது செய்ய போலீஸ் தயாராகி வருகிறது. மேலும் தலையில் துண்டுடன் தலைமறைவு ஆகிவிட்டனர் குணசேகரன் மற்றும் தம்பிகள்.
குணசேகரன் எதிரி சாருபாலா தான் பப்ளிக் prosecutor ஆக வழக்கில் ஆஜராக போகிறார் எனவும் குணசேகரனுக்கு அதிர்ச்சி தகவல் வருகிறது.

போட்டுடைத்த ஜனனி
வீட்டிற்கு வந்த ஜனனியிடம் அறிவுக்கரசி சண்டைக்கு வர, அவரை கீழே தள்ளி உதைத்து மாஸாக வீட்டிற்குள் நுழைகிறார்.
அதன் பின் மாமியாரிடம் உண்மையை போட்டுடைக்கிறார் ஜனனி. "இந்த சொத்தை வளர்த்து விட்டது மட்டும் தான் உங்க மகன், ஆனால் அதன் வேர் ஜானகி தான்" என கூறுகிறார் ஜனனி.
ப்ரோமோவை பாருங்க.