ஜனனிக்கு கிடைத்த உதவி, மாஸாக பேசிய நந்தினி.. எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய எபிசோடு ப்ரோமோ
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் குணசேகரன் தூண்டி விட்டதனால் அவரது தம்பிகள் இருவரும் தங்கள் மனைவிகளை விவாகரத்து செய்ய வேண்டும் என கிளம்பி இருக்கின்றனர்.
அதற்கு பஞ்சாயத்து பேச வந்த பெரியவர்களிடம் பெண்கள் சில விஷயங்களை கூற, அவர்கள் அங்கிருந்து பயந்து கிளம்புகிறார்கள். நீங்களே எதையாவது பேசிக்கோங்க, நாங்க கெளம்புறோம் என கூறிவிட்டு போகின்றனர்.

இன்றைய எபிசோடு ப்ரோமோ
இன்றைய எபிசோடு ப்ரோமோவில் ஜனனிக்கு ஒரு நபர் உதவி செய்ய முன் வருகிறார், ஆனால் ஜனனி வேண்டாம் என கூறிவிடுகிறார். எனக்கு உதவி செய்தால் அது உங்களுக்கும் ஆபத்தாக தான் முடியும் என சொல்கிறார் ஜனனி.
நான் ரெண்டு பாயிண்ட் பேசியதற்க்கே இப்படி குழம்பி நிக்குறாங்க என சொல்லி வில்லன்களை கலாய்த்து பேசி இருக்கிறார் நந்தினி.
அதன்பின் என்ன நடந்தது என ப்ரோமோவில் பாருங்க.