கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ
எதிர்நீச்சல்
சன் தொலைக்காட்சியில் நிறைய தொடர்கள் பரபரப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
நாளுக்கு நாள் கதைக்களத்தில் சூடு பறக்க திருப்பங்கள் என மக்களை அடுத்து என்ன அடுத்து என்ன என யோசிக்கும் அளவிற்கு வைக்கிறது. அப்படி மக்களை வெகுவாக கவர்ந்த ஒரு தொடராக சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல்.
கோலங்கள் சீரியல் புகழ் திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் தொடர் தான் எதிர்நீச்சல்.
முதல் பாகம் முடிவுக்கு வர 2ம் பாகம் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
புரொமோ
தற்போது கதையில் வீட்டுப் பெண்கள் வீட்டிற்குள் வர வேண்டும் என்பதற்காக குணசேகரன் தனது அம்மாவையே கொலை செய்ய துணிந்துவிட்டார்.
தனது அம்மாவிற்கு விஷத்தை குணசேகரன் கொடுத்து நாடகம் ஆடுகிறார், இன்றைய எபிசோடின் பரபரப்பான புரொமோ இதோ,