பெரிதாக வெடிக்கும் பிரச்சனை.. எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ
ஜனனி மற்றும் பெண்களுக்கு எதிராக ஆதி குணசேகரன் போடும் திட்டங்கள் எல்லாம் தோல்வியில் முடிந்தாலும் தொடர்ந்து அவர் பல தொல்லைகளை ஏற்படுத்தி வருகிறார்.
ஜனனி தொடங்கி இருக்கும் ஹோட்டலுக்கு எப்படியாவது பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என குணசேகரன் புது சிக்கலை கொண்டு வந்திருக்கிறார்.

இன்றைய ப்ரோமோ
இன்றைய எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் ப்ரோமோவில் ஹோட்டலை காலி செய்ய வேண்டும் ஒரு நபர் வந்து பிரச்சனை செய்கிறார். அதற்கு ஜனனி 'நாங்க legal ஆக எல்லாம் சரியாக செய்து விட்டு தான் தொடங்கி இருக்கிறோம், காலி செய்ய முடியாது' என உறுதியாக சொல்கிறார். அதை கேட்டு அந்த நபர் கோபமாக பேசிவிட்டு போகிறார்.
அடுத்து இந்த பிரச்சனை பெரிதாக வெடிக்க போகிறது என குணசேகரன் தனது தம்பிகளிடம் கூறுகிறார். ப்ரோமோவை பாருங்க.