ராணாவின் பிளான் இதுதானா, பெரும் சிக்கலில் குணசேகரன் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
இந்த எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் முதல் பாகத்தில் எல்லாமே வில்லன் குணசேகரன் ஆட்டமாக இருக்கும், இப்போது இந்த 2ம் பாகத்தில் ராணாவின் ஆட்டமாக இருக்கப்போகிறது என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.
ஆனால் கடைசிவரை பெண்கள் சாதிப்பது போல் கதையை காட்ட மாட்டார்கள் என்பது மட்டும் தெரிகிறது.

எபிசோடுகளை ஏற்றவே வில்லன் கை ஓங்கி இருப்பது நாயகி கஷ்டப்படுவதுமாகவே காட்டப்படுகிறது, இது பெண்களுக்கான கதை இல்லை ஆணாதிக்கம் கொண்ட வில்லன்களுக்கான கதையாகவே உள்ளது.
குணசேகரனை போல ராணாவும் நல்லவன் போல் நடித்து அந்த வீட்டின் கட்டுப்பாட்டை தனது கைக்குள் கொண்டு வருகிறார்.

புரொமோ
தற்போது வெளியாகியுள்ள புரொமோவில், குணசேகரனை அழிப்பதற்கு முன் அவன் குடும்பத்தில் உள்ள எல்லோரும் இறக்க வேண்டும், அதுதான் வேண்டும் என்கிறார்.

இன்னொரு பக்கம் தனது சொத்தின் அதிகாரத்தை ராணாவிற்கு கொடுப்பதாக கூறியது பற்றி கதிர்-ஞானம் பேசுகிறார்கள். பின் குணசேகரன் சொத்துப்பற்றி தான் எடுத்துள்ள முடிவு குறித்து வீட்டுப் பெண்களிடம் கூறுகிறார்.
அவர்கள் என்ன சொல்லப்போகிறார்களோ இன்று காண்போம்.