எதிர்நீச்சல் 2 கதை எதை நோக்கி போகிறது.. இன்றைய ப்ரோமோவை பாருங்க
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி சவாலில் ஜெயித்து தர்ஷனுக்கும் பார்கவிக்கும் திருமணம் செய்து வைத்துவிட்ட பிறகும் பல்வேறு பிரச்சனைகள் அவர்களுக்கு வந்துகொண்டு தான் இருக்கிறது.
ஆதி குணசேகரன் பற்றிய கடிதத்தை பற்றி தெரிந்துகொள்ள சக்தி முயற்சிக்கும் நிலையில் அவனை கொலை செய்ய குணசேகரன் முடிவெடுக்கிறார்.

இன்றைய ப்ரோமோ
தற்போது வெளியாகி இருக்கும் இன்றைய ப்ரோமோவில் கடைசி தம்பி சக்திக்கு முடிவு நெருங்கிவிட்டது என குணசேகரன் மற்ற தம்பிகளிடம் சொல்கிறார்.
மறுபுறம் அன்புக்கரசி தான் டிராமா செய்து கொண்டிருக்கிறார் என பார்கவியும் சொல்கிறார். இந்த கதை எங்கு சென்று முடியும் என ரசிகர்களும் தற்போது கேட்டு வருகிறார்கள். ப்ரோமோவை பாருங்க.
குணசேகரன் பணக்காரர் ஆனது எப்படி என்கிற உண்மை வெளியாகும், அல்லது அவரது இளம் பருவத்தில் செய்த மோசமான விஷயம் வெளியில் வரும் வகையில் தான் கதை அடுத்து நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.