அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியில் டிஆர்பி டாப்பில் ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று எதிர்நீச்சல் தொடர்கிறது.
தனது வீட்டுப் பெண்களை அடிமைப்படுத்தி அதில் குளிர்காயும் ஆணாதிக்க எண்ணம் கொண்டவரான குணசேகரன் வீட்டுப் பெண்களின் போராட்ட கதையாக எதிர்நீச்சல் தொடர்கிறது உள்ளது.

சக்தியை கடத்திவைத்து பல விஷயங்களை சாதிக்கலாம் என குணசேகரன் பிளான் போட இப்போது அது அப்படியே தலைகீழாக மாறியுள்ளது.
ஜனனி தனது பிரச்சனையை சரியான பாதையில் கொண்டு போய் இப்போது குணசேகரனுக்கு சரியான செக் வைத்துள்ளார்.

புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய எபிசோட் புரொமோவில், ஜனனி தங்களது சமையல் தொழிலை மீண்டும் துவங்கியுள்ளார்.

அதற்கான வேலைகளை அவர்கள் சந்தோஷமாக பார்க்க அறிவுக்கரசி வீட்டில் நடக்கும் விஷயங்களை வீடியோவாக குணசேகரனுக்கு காட்டி வருகிறார்.
தனது வீட்டுப் பெண்கள் சந்தோஷமாக அவர்களது வேலையை பார்ப்பதை பார்த்து செம கோபம் அடைகிறார் குணசேகரன்.