முடியாது என்ற குணசேகரன், நடக்கும் என மாஸ் காட்டிய ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
ஆணாதிக்கம் கொண்ட குணசேகரன் என்ன தான் தவறு செய்தாலும் பண பலம், ஆள் பலம் வைத்து தப்பித்துக் கொண்டே இருக்கிறார்.
ராவணனை குத்திவிட்டு மனநலம் சரியில்லை என நாடகம் போட்டார், இதனால் குடும்பத்தினர் தன்னை நினைப்பார்கள் என யோசிக்க அவர்கள் அவரவர் வேலைகளை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

இதனால் வீட்டில் இருக்கும் தனது பலம் போய்விடும் என பயந்த குணசேகரன் தனக்கு ஹோமில் பாதுகாப்பு இல்லை என ஒரு நாடகம் போட்டு மீண்டும் வீட்டிற்கே வந்துவிட்டார். எதுவும் நடக்காதது போல், சில விஷயங்கள் மறந்து போனது என்பது போல் வீட்டிற்கு வந்து நாடகம் நடத்துகிறார்.

புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், தர்ஷினி விளையாட்டு பள்ளியில் இருந்து ஒருவர் வீட்டிற்கு வருகிறார்.

அவர் தர்ஷினி மீண்டும் விளையாட வர வேண்டும் என கூற குணசேகரன் முடியாது என்கிறார். ஆனால் உடனே ஈஸ்வரி அவள் கண்டிப்பாக வருவாள் என கூற குணசேகரன் ஷாக் ஆகி பார்க்கிறார்.
ஈஸ்வரியின் இந்த முடிவை கேட்டு குடும்பத்தினர் சந்தோஷப்படுகிறார்கள்.