ராவணன் பிளான் குறித்து சக்தி சொன்ன விஷயம், உஷாரான ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் எப்போதும் ரசிகர்களை பரபரப்பாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்.
அடுத்து என்ன ஆகும், யாருக்கு தண்டனை கிடைக்கும், நியாயம் ஜெயிக்குமா என பல குழப்பங்கள் தொடரில் உள்ளது. ஜாமீன் கேன்சல் ஆனதால் குணசேகரன் ராவணன் உதவியுடன் தலைமறைவாகியுள்ளார்.

ஆனால் இந்த பிரச்சனையை அப்படியே ஜனனி பக்கம் திருப்புகிறார் கதிர், இன்னொரு பக்கம் சக்தி Vkவை தேடி அலைகிறார். ஜனனி ராவணன் பற்றிய உண்மையை தனது அக்காகளிடம் கூற அவர்கள் செம ஷாக் ஆகிறார்கள்.
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், ராவணன் குணசேகரனிடம் வீட்டில் என்ன நடக்கிறது, என்ன பேசுகிறார்கள் என்பதை நமக்கு தெரியவரும் என கூறுகிறார்.

மறுபக்கம், ஜனனி ராவணனுக்கு குணசேகரன் மட்டுமே எதிரி இல்லை, அவன் இந்த வீட்டு கடைசி வாரிசை வரை அழிப்பதில் மும்முரமாக உள்ளான் என்கிறார்.
ஜனனி ராவணன் குறித்து சக்தியிடம் பேசும்போது அவர் வீட்டில் கேமரா வைத்திருக்க வாய்ப்பு இருக்கிறது என கூற ஜனனி உஷார் ஆகிறார்.