மொத்தமாக மாட்டிக்கொள்ளும் பெண்கள்? எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திருமணம் பற்றிய பரபரப்பான காட்சிகள் தான் வந்துகொண்டிருக்கிறது. இன்றைய எபிசோடில் ஜீவானந்தம் உடலில் இருக்கும் துப்பாக்கி குண்டை பார்கவி தான் எடுக்கிறார். மயக்க மருந்து இல்லை என்பதால் அவர் வலியால் துடிக்கிறார்.
மறுபுறம் மண்டபத்தில் குணசேகரன் தரப்பு பரபரப்பாகவே இருக்கிறது. ஜனனி போனை தொலைத்துவிட்டு ரோட்டில் நின்று இருந்த நிலையில், கடைக்காரர் அவரது போனை கொண்டு வந்து கொடுக்கிறார். அதில் சார்ஜ் இல்லாததால் ஒரு கடைக்கு சென்று போடுகிறார்.
அப்போது ரௌடிகள் அங்கு வர ஜனனி ஒளிந்துகொள்கிறார். அந்த நேரத்தில் நந்தினி போன் செய்ய ஒருவழியாக ஜனனி மாட்டாமல் தப்பிக்கிறார். தர்ஷன் மண்டபத்தில் இருந்து வெளியில் வருவாரா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
நாளைய ப்ரோமோ
இந்நிலையில் தற்போது நாளைய எபிசோடு ப்ரொமோ வெளியாகி இருக்கிறது. அதில் நந்தினி எங்கே என குணசேகரன் கேங் தேட தொடங்குகிறது. முஸ்லீம் பெண் போல வந்தது நந்தினி தான் என சந்தேகத்தில் விசாரிக்கின்றனர்.
மறுபுறம் ஜனனி பார்கவிக்கு போன் செய்து ரௌடிகள் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வெளியே தான் இருக்கிறார்கள் என உஷார் படுத்துகிறார்.
நந்தினி சிக்கிக்கொள்வாரா, ஜனனி பார்கவியை காப்பாற்றுவாரா? நாளை பார்க்கலாம். ப்ரோமோ இதோ.

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
