ஜெயித்தோம் என திமிராக இருந்த குணசேகரன், அடுத்த செக் வைத்த பெண்கள்- எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல், சன் தொலைக்காட்சியில் விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்.
குணசேகரன் என்ற ஆணாதிக்கம் கொண்ட நபரிடம் சிக்கிக்கொண்ட அவர்களின் வீட்டுப் பெண்கள் எதிர்நீச்சல் போட்டு எப்படி சாதிக்கிறார்கள் என்பது தான் கருவே.
ஆனால் ஒவ்வொரு முறையும் பெண்கள் துணிவது போல் தெரியவரும் போது மீண்டும் அடிமை வாழ்க்கையில் சிக்கிவிடுகிறார்கள்.
புரொமோ
இப்போது பார்கவி அப்பாவின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என குணசேகரன் வீட்டிப் பெண்கள் போராடி வருகிறார்கள். குணசேகரன் மீது பெண்கள் வழக்கு தொடர்ந்தால் அவரோ தனது தம்பி ஞானத்தை மாட்டிவிட்டு தப்பிவிடுகிறார்.
இதனால் ரேணுகா மிகவும் வருத்தம் அடைகிறார். இன்றைய எபிசோடின் புரொமோவில், ஈஸ்வரி, ஜனனி என அனைவரும் பார்கவியை அழைத்துக்கொண்டு குணசேகரன் வீட்டிற்கு வருகிறார்கள்.
அதோடு பார்கவி இனி இங்கே தான் இருப்பார், அவருக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் அதற்கு குணசேகரன் மற்றும் கதிர் தான் காரணம் என போலீஸ் நோட்டீஸுடன் வீட்டிற்கு வருகிறார்கள்.
அதைப்படித்த குணசேகரன் மற்றும் கதிர் இருவரும் கோபத்தின் உச்சத்திற்கு சென்றுவிட்டனர். இதோ புரொமோ,