வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது தொடரில் பெண்கள் எப்போது தைரியமாக எழுந்து நின்று அடுத்தடுத்து குணசேகரனுக்கு அடி கொடுப்பார்கள் என்று தான் மக்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
குணசேகரன் ராஜ்ஜியம் இறங்குவது போல் தெரியும் உடனே பெண்களை அடக்கி மேலே வந்துவிடுகிறார். பெண்களை ஏமாற்றி தர்ஷனை வீட்டிற்கு வர வைத்துவிட்ட அவர் தனது தந்திர வேலையை காட்டிவிட்டார்.

வருங்கால கணவருடன் நெருக்கமான புகைப்படம் வெளியிட்டு திருமண செய்தியை அறிவித்த தான்யா ரவிச்சந்திரன்.. வைரல் போட்டோ
இதனால் அநியாயமாக பார்கவியின் அப்பா உயிரிழந்துவிட்டார். அவரின் இறப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என பெண்கள் போராட குணசேகரன் தனது தம்பி ஞானத்தை பகடைகாயாக பயன்படுத்திவிட்டார்.
புரொமோ
இன்றைய எபிசோடில் எப்படியோ பார்கவி வீட்டிற்குள் வந்துவிட்டார். வந்தவர் நான் என் அப்பா ஆசையை நிறைவேற்றுகிறேன் ஆனால் இங்கு வேண்டாம், என்னை உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள் என பார்கவி, ஜீவானந்தத்திடம் கெஞ்சுகிறார்.
இன்னொரு பக்கம் குணசேகரன் என்னுடைய ஒரே குறிக்கோள் எனது மகன் திருமணம் தான் என கூறுகிறார். அடுத்து மகன் திருமணத்தை நடத்த அவர் ஏதோ பிளான் செய்துவிட்டது நன்றாக தெரிகிறது. இதோ புரொமோ,