அடுத்து சக்திக்கு ஏற்படப்போகும் பிரச்சனை, சிக்கலில் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இப்போது காணாமல் போன தர்ஷினியை வைத்து பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது.
குணசேகரன் தான் கொடுமையான வில்லன் என்று பார்த்தால் அவரை விட மோசமானவராக ராணா உள்ளார். தர்ஷினியை அவரே ஆள் வைத்த கடத்தி வைத்துவிட்டு குணசேகரன் வீட்டில் நுழைய ஒரு பிளான் போட்டு இப்போது குடும்பத்திற்குள் சென்றுவிட்டார்.

ராணா வந்ததில் இருந்து அவர் பக்கம் குணசேகரன் திரும்ப கதிர் செம கோபத்தில் தற்போது உள்ளார். இதற்கு இடையில் தர்ஷினியை தேடிச்சென்ற ஜனனி அவரை காப்பாற்றிவிட்டார், ஆனால் உடன் இருந்தவர் இறந்துவிட்டார்.

புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், சக்தி வீட்டிற்கு வந்து எவனோ ஒருத்தன் தான் திட்டம் போட்டு இதெல்லாம் செய்கிறான், ஆனால் அவன் யார் என்று தெரியவில்லை என கூற, கரிகாலன் எனக்கு தெரியும் ராவணன் தான் என்கிறார்.

பின் ராணா சகதியை பாலோ செய்யுங்கள், விடக்கூடாது. கண்டிப்பாக அவன் ஜனனி தேடிச்செல்வான் என்கிறார்.
அருந்ததி, ஜனனியிடம் ஒரே இடத்தில் இருந்து நாம் சிக்கினால் வேறுமாதிரி சொல்லிவிடுவார்கள், நான் தனியாக செல்கிறேன், நீங்கள் தனியாக செல்லுங்கள் என்கிறார். ஜனனியும் சரி தான் என்கிறார்.
கடனுக்கு வட்டி செலுத்தவே வருவாயின் மூன்றில் ஒரு பங்கு : நிதியமைச்சர் கூறிய பரபரப்பு தகவல்! IBC Tamilnadu
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன் News Lankasri
முதல்வர் விஜய்யை சந்தித்த விஷால்: வித்தியாசமான பரிசால் சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு! IBC Tamilnadu