எதிர்நீச்சல் தொடர்கிறது: குணசேகரனை கொலை செய்ய ராவணன் போட்ட திட்டம், சிக்கலில் ஜனனி...
எதிர்நீச்சல் தொடர்கிறது
இந்த கதை நிஜமாகவே பெண்கள் எழுச்சிக்கான கதையா என கேட்கும் அளவிற்கு சென்று கொண்டிருக்கும் கதை தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.
ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி என இந்த 4 பெண்களின் வாழ்க்கை கதையாக தான் சீரியல் தொடங்கியது. தங்கள் வாழ்க்கையில் ஆணாதிக்க எண்ணம் கொண்டவர்களிடம் இருந்து இவர்கள் எப்படி தப்பிப்பார்கள் என்பதையே கதை என்றனர்.

ஆனால் இதுவரை கதையில் இந்த 4 பெண்கள் ஜெயித்தது போல் காட்டவே இல்லை, இவர்கள் பேசிக்கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் ஜெயிப்பதற்கான வழி காணவில்லை.
கொஞ்சம் முன்னேற்றம் தெரிவது போல் கதை வருகிறது, ஆனால் அப்படியே மீண்டும் பின்னுக்கு சென்றுவிடுகிறார்கள்.

புரொமோ
தற்போது கதையில் அண்ணனே தெய்வம் என இருந்த கதிர் இப்போது மாறிவிட்டார், அதேபோல் தான் ஞானம் இருந்தார் ஆனால் மாறிவிட்டார்.

இப்போது குணசேகரன் மகன் தர்ஷன் ராவணன் வலையில் சிக்கியுள்ளார், ஆபத்தை நோக்கி செல்கிறார். அவரை யாரோ பின்னால் இருந்து மாற்றுகிறார்கள் என்பதை கண்டுபிடித்த ஜனனி தர்ஷனை பாலோ செய்கிறார்.
இதற்குள் ராவணன், குணசேகரன் கோர்ட் வருவது போல் இருந்தால் அங்கேயே அவரை முடிக்க வேண்டும் என பிளான் போடுகிறார்.
விமான சேவை முடக்கத்தை அடுத்து... அமெரிக்காவை ஸ்தம்பிக்க வைத்த மிகப்பெரிய சேவை முடக்கம் News Lankasri