தர்ஷினி கூறிய உண்மை, செம கோபத்தில் முடிவு எடுத்த குணசேகரன்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களை எப்போதும் பரபரப்பிலேயே வைத்துள்ளார் இயக்குனர்.
டபுள் டாக்குமென்ட் கொண்ட இடம் என்பதை அறிந்த அறிவுக்கரசி அதைவைத்து ராவணனை மிரட்டி தனது தங்கையின் திருமணத்தை நடத்தி முடிவு திட்டமிட்டுவிட்டார். அதற்கு ஏற்றார் போல் தர்ஷனும் அன்புக்கரசியை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார்.

இதற்கு இடையில் ஜனனி, VK வை கோர்ட்டில் நிறுத்த அவரை எப்படி அழைத்து வருவது என யோசித்து வருகிறார்.
ஆனால் ராவணன் VKவை விடுவது போல் தெரியவில்லை, ஜனனி என்ன செய்கிறார் என்பதையும் நோட்டம் விட்டு வருகிறார்.

புரொமோ
தற்போது இன்றைய எபிசோடின் புரொமோவில் வீட்டிற்கு வந்த குடும்பத்தினர் வீட்டில் ஜனனி இல்லை என யோசிக்கிறார்கள்.

பிறகு தர்ஷினி தனது அம்மா மற்றும் சித்திக்களிடம், ஜனனி தன்னை கடத்தியதாக சொன்னது பொய் என கூற அவர்கள் ஷாக் ஆகிறார்கள். குணசேகரன் தன்னைப் பற்றிய உண்மை அரிய ஜனனி இராமேஸ்வரம் சென்ற விஷயத்தை கேட்டு செம கோபத்தில் ஒரு முடிவு எடுக்கிறார்.
இன்னொரு பக்கம் ராவணன் அடியாட்கள் VKவை கடத்திவிடுகிறார்கள். அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறதோ பொறுத்திருந்து பார்ப்போம்.