வீட்டில் திடீரென நடந்த சம்பவம், ஆடிப்போன குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
குணசேகரன் வழக்கு அப்படியே நிற்கிறது, ஜனனி மீது ஈஸ்வரிக்கு ஏற்பட்ட அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
ஜனனிக்கு சப்போர்ட் செய்யாமல் நந்தினி-ரேணுகா எதற்கு வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இதற்கு இடையில் தர்ஷினி ராணாவால் கடத்தப்பட எப்படியோ ஜனனி அவரை காப்பாற்றிவிட்டார்.

ஆனால் ஜனனி மீதே பழி விழுந்துள்ளது, ராணா தான் அதையும் செய்ய வைத்துள்ளார். ஆனால் அந்த விஷயத்தை வைத்தே குணசேகரன் வீட்டில் என்ட்ரி கொடுக்க இப்போது அவர்களது குடும்பத்தில் ஒருவராக உள்ளார். குணசேகரன் தனது தம்பிகளை தாண்டி ராணா பக்கம் சாய்ந்துவிட்டார்.
தன்னை நன்றாக பயன்படுத்திவிட்டு இப்போது தன்னை தூக்கி எரிந்துவிட்டான், அவனை ஏதாவது செய்ய வேண்டும் என குணசேகரன் மீது செம கோபத்தில் உள்ளார் கதிர்.

புரொமோ
இன்றைய எபிசோடின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. அதில் சக்தியை சந்தித்து சாருபாலா ஏதோ பிரச்சனை குறித்து பேசுகிறார். இதற்கு இடையில் வீட்டில் ரேணுகா அம்மா சாமி ஆடுகிறார், ராணாவை பார்த்து முறைத்தபடி உள்ளார்.

விசாலாட்சி தனது பேத்தி காணாமல் போனது குறித்து கேட்க அவர் ராணா பக்கம் திரும்ப அவரும் கொஞ்சம் பதறுகிறார்.
ஆனால் அவர் என்ன சொன்னார், சாருபாலா என்ன பிரச்சனை குறித்து சக்தியிடம் கூறுகிறார் என்பதை எபிசோடில் காண்போம்.
லொட்டரியில் கொட்டிய $803 மில்லியன் அதிர்ஷ்ட மழை: புளோரிடாவை சேர்ந்த நபருக்கு கிடைத்த ஜாக்பாட் News Lankasri
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri