பிரச்சனையை தொடங்கிய கதிர்.. எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் கதை கடந்த சில வாரங்களாக சண்டை சச்சரவு இல்லாமல் அமைதியாக சென்று கொண்டிருந்தது. அதற்கு காரணம் ஆதி குணசேகரன் மற்றும் அவரது தம்பிகள் போலீஸ் கைதுக்கு பயந்து தலைமறைவாக சுற்றி வந்தது தான்.
தற்போது குணசேகரன் தன் தம்பிகளை மட்டும் வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். நீங்கள் போய் உங்கள் மனைவிகளை மட்டும் அடக்கி வைக்க பாருங்க என அட்வைஸ் கொடுத்து அனுப்புகிறார்.

ப்ரோமோ
இன்றைய எபிசோடு ப்ரோமோவில் கதிர் நேராக வீட்டுக்கு வந்து எல்லோரிடமும் சண்டையை தொடங்குகிறார். போலீசிடம் போட்டு கொடுத்த சொந்த அம்மாவையே திட்டுகிறார், அவரும் உடனே பதிலடி கொடுக்கிறார்.
அதன் பின் ஜனனி ஹோட்டல் வைத்திருக்கும் இடத்திற்குள் நுழைய பார்க்கிறார் கதிர், அப்போதும் கைகலப்பும் தொடங்குகிறது. ப்ரொமோவை பாருங்க.