தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியின் எதிர்நீச்சல் சீரியல் 4 பெண்களின் வாழ்க்கையை மையமாக கொண்ட ஒரு தொடர்.
குணசேகரன் என்ற ஆணாதிக்கம், பெண் அடிமை எண்ணம் கொண்ட ஒரு கொடூரமான நபரிடம் இருந்து எதிர்நீச்சல் போட்டு வெளியே வந்து சாதிக்க அவரது வீட்டிப் பெண்கள் போராடி போராடி பார்க்கிறார்கள், ஆனால் ஏதாவது ஒரு விஷயத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.
அப்படி தான் குணசேகரனால் தாக்கப்பட்ட ஈஸ்வரி வழக்கில் நிறைய அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது.
புரொமோ
ஜாமினில் வீட்டிற்கு வந்த ஜனனி, குணசேகரனுக்கு சமமாக உட்கார்ந்து சவால் விட்டு சென்றார்.
இந்த வழக்கில் எப்படி உண்மையை கண்டுபிடிப்பது எனவும் போராடி வருகிறார் ஜனனி.
தற்போது நாளைய எபிசோடிற்கான புரொமோ வெளியாகியுள்ளது, அதில் தர்ஷனை தன் வழிக்கு கொண்டு வர அவரது பாலில் ஏதோ கலந்துகொடுக்கிறார் அறிவுக்கரசி.
பின் ஞானம் ஜாமினில் வெளியே வந்துவிட்டார் என வக்கீல் கூற குணசேகரன் என்னது வந்துட்டானா என ஷாக் ஆகிறார். இதோ புரொமோ,

ரஷ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் பார்க்கும் இந்தியா! அமெரிக்கா விடுத்த அடுத்த எச்சரிக்கை News Lankasri
