விவாகரத்து கேட்ட கதிருக்கு ஷாக் கொடுத்த நந்தினி.. எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் தொடர்ந்து பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. வீட்டுக்குள் ரீஎன்ட்ரி கொடுத்து இருக்கும் கதிர் மற்றும் ஞானம் இருவரும் பிரச்னையை தொடங்கி பெண்களுக்கு தலைவலியை கொடுக்க தொடங்கி இருக்கின்றனர்.
ஜனனி ஹோட்டல் தொழிலை தொடங்கி நடத்தி வரும் நிலையில், அவருடன் இருக்கும் மற்ற பெண்களை பிரிக்கவேண்டும் என கதிர் மற்றும் ஞானம் திட்டமிட்டு சில விஷயங்கள் செய்து வருகின்றனர்.

ப்ரோமோ
தற்போது வெளியாகி இருக்கும் இன்றைய ப்ரோமோவில் தன் மகள் மற்றும் மனைவி நந்தினி வீட்டுக்கு வர வேண்டும், விவாகரத்து கொடுத்துவிட்டு எங்கே வேண்டுமானாலும் போகட்டும் என கதிர் சொல்கிறார்.
அங்கு போய் தெளிவாக ஒரு முடிவெடுத்துவிட்டு வாங்க என ஜனனி நந்தினியை அனுப்பி வைக்கிறார்.
நந்தினியும் அங்கு கோபமாக சண்டை போட்டுவிட்டு ஒரு முடிவை எடுக்கிறார். மகளை அழைத்துக்கொண்டு 'உனக்கு இனி அம்மா மட்டும் தான், அப்பன் செத்துட்டான்' என சொல்லி கோபமாக அங்கிருந்து போகிறார். ப்ரோமோ இதோ.
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri