அறிவுக்கரசி காதுக்கு வந்த ஷாக்கிங் தகவல், ஜீவானந்தம் போட்ட பிளான்- எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட்டான தொடர்களில் ஒன்றாக உள்ளது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.
தர்ஷனுக்கு யாருடன் திருமணம் நடக்கும் என்ற கதைக்களத்தை வைத்து கடந்த சில மாதங்களாக பரபரப்பின் உச்சமாக கதை செல்கிறது. குணசேகரன் அடியாட்களை அனுப்பி ஜீவானந்தம், பார்கவியை காலி செய்ய பிளான் போட்டுவிட்டார்.
இன்னொரு பக்கம் மண்டபத்தில் தர்ஷன்-அன்புக்கரசி திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக செல்கிறது.
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், ஈஸ்வரி போனில் இருப்பதை எடுக்க வந்த நபர் அறிவுக்கரசியிடம் ஒரு ஷாக்கிங் தகவல் கூறுகிறார்.
குணசேகரன் தான் அனுப்பிய ஆட்கள் எப்போது ஜீவானந்தம் கதை முடிந்தது என்று கூறுவார்கள் என காத்துக் கொண்டிருக்கிறார்.
இங்கே ஜீவானந்தம், ஜனனி, பார்கவி 3 பேரும் அடியாட்களிடம் இருந்து எப்படி தப்பிப்பது என பிளான் போடுகிறார்கள்.