திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி மற்றும் மற்ற பெண்கள் சேர்ந்து தொடங்க இருக்கும் ஹோட்டல் தொழிலை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என குணசேகரன் வெறியுடன் சுற்றிக்கொண்டிருக்கிறார்.
அவர் மற்றும் தம்பிகள் கைதுக்கு பயந்து தலைமறைவாக இருப்பதால் அவர்கள் நேரடியாக வந்து எதுவும் செய்ய முடியாத நிலை இருக்கிறது. இருப்பினும் மற்றவர்களை வைத்து பிரச்சனை செய்ய காய்நகர்த்தி வருகின்றனர்.

இன்றைய ப்ரோமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டிருக்கும் அறிவுக்கரசியை வெளியில் போகும்படி விசாலாட்சி சொல்கிறார்.
அதன் பின் ஞானம் மனைவி ரேணுகாவுக்கு போன் செய்து திறப்பு விழாவுக்கு போக வேண்டாம், அங்கு பெரிய பிரச்சனை இருக்கிறது என சொல்கிறார்.
குணசேகரன் தம்பியே இப்படி போட்டு கொடுத்ததால் ஜனனி தரப்பு உஷார் ஆகுமா, இல்லையா என பொறுத்திருந்து பார்க்கலாம். ப்ரோமோவை பாருங்க.
மூத்த குடிமக்களுக்கு சிறந்த ஆஃபர் - ரூ.1,000 முதலீடு செய்தால், மாதம் ரூ.20,500 பெறலாம் News Lankasri