பெண்கள் பிளான் எல்லாம் சுக்குநூறாக போகிறது, தர்ஷனை காப்பாற்றுவது எப்படி.. எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ
எதிர்நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல் தொடர்கிறது, சன் டிவியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்.
திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த தொடரின் முதல் சீசன் முடிவடைந்து 2வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது கதையில் பரபரப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருப்பது தர்ஷனின் திருமணம் தான்.
பார்கவி அப்பா குணசேகரன் சூழ்ச்சியால் அடி வாங்கி இறக்க அவரின் இறப்பிற்கு நியாயம் கிடைத்தே ஆக வேண்டும் என பெண்கள் போராடி வருகிறார்கள்.
புரொமோ
இப்போது கதையில் விறுவிறுப்பின் உச்சமாக குணசேகரன் தர்ஷன்-அன்புக்கரசி திருமணத்தை ஏற்பாடு செய்து வருகிறார்.
இன்னொரு பக்கம் அவர் செய்யும் சூழ்ச்சியை போலவே அவர்களுடன் இருந்தே அவர்களின் பிளானை உடைக்க வேண்டும் என பெண்கள் அமைதியாக எல்லா வேலைகளையும் செய்கிறார்கள். தற்போது தொடர் குறித்து ஒரு பரபரப்பான புரொமோ வெளியாகியுள்ளது.
அதில், தர்ஷன் பார்கவியை சந்திக்க அன்புக்கரசியை ஏமாற்றி செல்ல அதனை அவர் கண்டுபிடித்துவிடுகிறார். பின் அன்புக்கரசி, அறிவுக்கரசிக்கு போன் செய்து தர்ஷன் என்னை ஏமாற்றுகிறான் உடனே வா என எல்லா விஷயத்தையும் கூறுகிறார்.
கதிர், அறிவுக்கரசி கோபமடைய இன்னொரு பக்கம் ஜனனி, ரேணுகா தர்ஷனை காப்பாற்ற வேண்டும் என அவன் இருக்கும் இடத்திற்கு செல்ல முயற்சிக்கிறார்கள்.
இதனால் பெண்கள் போட்ட பிளான் குணசேகரனுக்கு தெரிய வருமா தர்ஷன் நிலைமை என்ன என நிறைய கேள்விகள் எழும்புகின்றன.