அழுது புலம்பும் ஜனனியை பார்க்க வந்த 2 நபர்கள், புதுப்பிரச்சனையா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது.
முதல் பாகத்தில் பெண்கள் குணசேகரனுக்கு தண்டனை வாங்கி கொடுத்து தங்களது வாழ்க்கையில் முன்னேறியுள்ளது போல் காட்டப்பட்டது.
இரண்டாவது பாகம் தொடங்கப்பட்ட போது பெண்கள் சாதிப்பார்கள், குணசேகரன் பிரச்சனைகளுக்கு பதிலடி கொடுப்பார்கள் என்று தான் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள்.

ஆனால் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது போல் 2வது சீசன் இல்லை, இதிலும் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டே உள்ளனர்.
புரொமோ
பெண்கள் முன்னேற முயல்வதும் குணசேகரன் அவர்களை அழிக்க நினைப்பதும் என வழக்கமான கதையாகவே உள்ளது. இன்றைய எபிசோட் புரொமோவில், சக்தி தான் அப்பாவாக போவதை நினைத்து மிகவும் சந்தோஷப்படுகிறார்.

பின் நந்தினி, குணசேகரன் எல்லாவற்றையும் செய்துவிட்டு எப்படி நடிக்கிறார் என புலம்புகிறார்.
அடுத்த நாள் காலையில் ஜனனியை தேடி இரண்டு பேர் வருகின்றனர், அவர்கள் யார் என தெரியவில்லை. ஆனால் குணசேகரன் புதியதாக தொடங்கிய பிரச்சனையா என தெரியவில்லை. இதோ புரொமோ,