பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
குணசேகரன், நான் நினைத்தது தான் நடக்க வேண்டும் எல்லோரும் எனது கீழே தான் என ஆணாதிக்கம் கொண்ட ஒரு நபர்.
இவரிடம் சிக்கி தவிக்கும் அவரது வீட்டிப் பெண்களின் போராட்ட கதையாக இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. திருமணம் கடந்த சில மாதங்களாகவே தர்ஷன் திருமண ஏற்பாடு விறுவிறுப்பின் உச்சமாக சென்று கொண்டிருக்கிறது.
தர்ஷனுக்கு ஈஸ்வரி ஆசைப்பட்டது போல் எப்படியாவது பார்கவியுடன் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என ஜனனி, நந்தினி, ரேணுகா போராடுகிறார்கள். அறிவுக்கரசி தனது தங்கையுடன் தான் திருமணம் நடக்க வேண்டும் என அவர் ஒரு பிளான் போடுகிறார்.
புரொமோ
குணசேகரன் ஈஸ்வரியை தாக்கும் வீடியோவை வைத்து ஒரு நபர் அறிவுக்கரசியிடம் டீல் பேசுகிறார், அவரும் எதுவும் செய்ய முடியாமல் பணத்தை ஏற்பாடு செய்கிறார்.
ஆனால் அதில் ஏதோ ஒரு பிளான் அவர் வைத்துள்ளார் என்பது தெரிகிறது.
முல்லை வேந்தன் நந்தினியை பார்த்து காதல் ததும்ப சக்தியிடம் பேச பளார் என ஒரு அறை விடுகிறார். இன்னொரு பக்கம் குணசேகரன் திருமண நேரம் மாற்றம் என கூற தர்ஷன் ஷாக் ஆகிறார்.