அடுத்த டிராமாவை போட்ட குணசேகரன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

Report

எதிர்நீச்சல் தொடர்கிறது

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் என்ன தவறு செய்தாலும் ஜெயிக்கும் ஆண்களின் கதையாகவே இந்த தொடர் உள்ளது.

பெண்கள் எழுச்சிக்கான கதை என்று கூறினார் இயக்குனர், ஆனால் என்ன தவறு, அநியாயம் செய்தாலும் எதிலும் சிக்காமல் மீண்டும் மீண்டும் ஜெயிக்கும் ஆண்களின் எழுச்சி கதையாகவே இருக்கிறது.

முதல் சீசன் தான் அப்படி என்றால் இரண்டாவது சீசனிலும் அப்படியே கதை நகர்கிறது, நாளுக்கு நாள் ரசிகர்களும் சீரியல் கதை குறித்து தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகிறார்கள். 

அடுத்த டிராமாவை போட்ட குணசேகரன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ | Ethirneechal Thodargiradhu Promo 27 Apr 2026

புரொமோ

ஈஸ்வரியிடம் அதிர்ச்சி தரும் செய்திகள் கூறினால் அவரது உடல்நிலை மோசமாகிவிடும் என மருத்துவர் கூறியதால் எல்லா உண்மைகளையும் ஜனனி, நந்தினி, ரேணுகா மறைத்து வருகிறார்கள்.

அதனை ஒரு வாய்ப்பாக வைத்து குணசேகரன் நல்லவராக நடித்து ஈஸ்வரியின் மனதை மாற்றி வந்தார், தற்போது அது நடந்தும்விட்டது. ஈஸ்வரி ஜனனி மீது கடும் கோபத்தில் உள்ளார், நீ தான் சர்வாதிகாரியாக உள்ளாய் என கூற அவர் செம ஷாக் ஆகிறார்.

அடுத்த டிராமாவை போட்ட குணசேகரன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ | Ethirneechal Thodargiradhu Promo 27 Apr 2026

குணசேகரன் அடுத்து நாடகத்தை தொடங்கிவிட்டார், வீட்டில் மயக்கம் வந்தது போல் செய்ய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.

இன்றைய எபிசோட் புரொமோவில், ஈஸ்வரி அவரது உடல்நிலை சரியில்லை இப்போது கூட அவரை பார்க்க கூடாதா என கேட்க, ஜனனி இறக்கம் உள்ளவர்கள் போய் பாருங்கள் எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்காதீர்கள் என்கிறார்.

அடுத்த டிராமாவை போட்ட குணசேகரன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ | Ethirneechal Thodargiradhu Promo 27 Apr 2026

பின் வீட்டிற்கு வந்த கதிர் குணசேகரன் உடல்நிலை சரியில்லை, மோசமாக உள்ளது என கூற அனைவரும் ஷாக் ஆகிறார்கள். ஆனால் ஜனனி மட்டும் கதிர் போடும் நாடகத்தை நம்பவே இல்லை.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US