தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியில் எந்த சீரியல் எடுத்தாலும் ஒரு திருமணம் என்ற நடந்தால் பெரிய பிரச்சனைகளோடு சில வாரங்கள் ஓடிய பிறகே நடக்கும்.
அப்படி பரபரப்பின் உச்சமாக நடக்குமா இல்லையா, யாருடன் நடக்கும், அதற்குள் இவர்களுக்கு என்ன ஆகும், எதிரி கண்டுபிடித்துவிடுவார்களா என பல கேள்விகளுடனே எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷன் திருமண காட்சிகள் செல்கிறது.
நேற்றைய எபிசோட்
குணசேகரன் ஜனனி பிளானை கண்டு பயந்து 9 மணிக்கு இருந்த முகூர்த்த நேரத்தை 4 மணிக்கு எல்லாம் மாற்றிவிட்டார். அதோடு வெளி ஆட்கள் அனைவரையும் அனுப்பிவிட்டு தர்ஷன் முதல் அனைவரையும் தன் கண்முன்னே தூங்க வைக்கிறார்.
இன்னொரு பக்கம் ஜனனி, ஜீவானந்தம், பார்கவி ரவுடிகளிடம் இருந்து தப்பிக்க முயல்கிறார்கள்.
புரொமோ
இன்றைய எபிசோடிற்கான புரொமோ தான் மிகவும் பயங்கரமாக உள்ளது. குணசேகரன், ஜனனி, ஜீவானந்தம், பார்கவி 3 பேரின் உயிரையும் எடுக்க கூறுகிறார்.
இன்னொரு பக்கம் அறிவுக்கரசி வீடியோ வைத்து தன்னை மிரட்டிய நபரை கத்தியால் குத்தி கொன்டுவிடுகிறார். ஜனனி அடியாட்களை சமாளித்து அங்கிருந்து தப்பிக்கிறார். இதோ பரபரப்பு புரொமோ,