ஜனனியை அடிக்க பாய்ந்த கதிர், மருத்துவமனையில் போடப்பட்ட கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
இப்படி எல்லாம் பிளான் போடலாமா, குடும்பத்தை இதுபோல் எல்லாம் ஏமாற்றலாமா என்று மக்கள் கேட்கும் அளவிற்கு வில்லங்கமாகவே உள்ள கதை தான் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.
கோலங்கள் என்ற தொடரை இயக்கிய திருச்செல்வமா இந்த சீரியலை இயக்குகிறார் என ரசிகர்கள் ஷாக் ஆகும் அளவிற்கு சீரியல் கதைக்களம் வர வர மோசமாக சென்று கொண்டிருக்கிறது.
வில்லன்கள் கை ஓங்கியபடியும், நியாயத்திற்காக போராடும் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு, தோற்றுக்கொண்டே இருக்கும் வகையில் தான் கதை இப்போது வரை உள்ளது, 2 சீசன்கள் வந்துவிட்டது.

புரொமோ
ஈஸ்வரி வந்தால் கதை மாறும் என்று பார்த்தால் அவர் பழைய விஷயங்கள் எல்லாவற்றையும் மறக்க இப்போது குணசேகரனை அவரை ஆட்டிவைத்துக் கொண்டு வருகிறார். கொஞ்சம் கொஞ்சமாக குணசேகரன், ஈஸ்வரியிடம் தவறாக பேசி பேசி அவரது எண்ணத்தை மாற்றிவிட்டார்.

ஈஸ்வரி சொல்லியும் ஜனனி வழக்கில் இருந்து பின் வாங்குவதாக இல்லை என்பதால் இப்போது உடல்நிலை பாதிப்பு நாடகத்தை போட்டுள்ளார் குணசேகரன்.
இன்றைய எபிசோட் புரொமோவில், ஜனனி இவர்கள் போடுவது நாடகம் என கூற கதிர் அவரை அடிக்க பாய்ந்து வருகிறார். இன்னொரு பக்கம் ஜனனி சொன்னது போல் உடல்நலக் குறைவு நாடகம் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan